திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதோடு மட்டுமின்றி, விபத்துக்களை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 7 மணி முதல் 9 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை மீஞ்சூர் பொன்னேரி வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.