நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், பல மாநிலங்களும் கொரோனாவால் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் கல்வி செலவையும் ஏற்பதாக அறிவித்து உள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories