Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : பள்ளி மாணவி மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்….. வெளியான அதிரடி தகவல்….!!!!

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவியின் உடலை வாங்க மறுத்தும், மாணவி மரணத்திற்கு நீதி கேட்டும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் வழக்கு விசாரணை முறையாக சென்று கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர், சமூக வலைதளங்களில் வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |