பழம்பெரும் நடிகரான அருண் பாலி மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79. 1989 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் 3 இடியட்ஸ், கோதார் நாத், கமல்ஹாசனின் ஹே ராம், பாணி பட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 1991 ஆம் ஆண்டு திரைத்துறையில் அக்ஷய் குமாரின் சவுகந்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். நமது நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ள இவர் தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் என்றும் கூறப்படுகிறது. இவரின் மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.