Categories
தேசிய செய்திகள்

 Breaking: பாஜகவில் இணைந்த சூப்பர் ஸ்டார் ஜோடி… அதிரடி…!!!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் விஜய சாந்தி இன்று மீண்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில்இணைந்தார்.

தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக திகழும் முக்கிய பிரபலம் விஜயசாந்தி. அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் உள்ளது. இந்நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் விஜய சாந்தி இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார். ஏற்கனவே பாஜகவில் இருந்த டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சென்றார். காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் அங்கு தனக்கு உரிய மரியாதை கிடைக்காததால் தெலுங்கானா பாஜக தலைவர் சஞ்சய் குமார் மற்றும் இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெபி.நட்டா ஆகியோரை நேரில் சென்று சந்திக்க உள்ளார். அவருக்கு பாஜகவினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |