தமிழகத்தில் பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணனுக்கு உடனே தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஒவ்வொரு கட்சியினரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாலும், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததாலும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சரவணன் அதிருப்தியில் இருந்தார்.
இதனையடுத்து இன்று மாநில தலைவர் முருகன் முன்னிலையில் திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் இன்று திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த எம்எல்ஏ சரவணன் மதுரை வடக்கு தொகுதியில் வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.