அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் பாஜகவில் இணைய போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், பாஜக சித்தாந்தத்தை யார் நம்பி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அரசியலில் யாருக்கும் எந்த கட்சியும் நிரந்தரம் கிடையாது. சுதந்திரமாக செயல்பட முடியாததால் சிலர் பாஜகவை தேடி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
Categories