புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகுவதாக முடிவு செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதி களுக்கு விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக பாமக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி ஒதுக்க படாததால் அதிருப்தி அடைந்த பாமக, புதுச்சேரியில் 12 தொகுதிகளிலும், காரைக்காலில் மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அக்கட்சியின் துணைத் தலைவர் சத்திய நாராயணன் அறிவித்துள்ளார்.