திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக் குறைவால் காலமானார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன். அவருக்கு வயது 65.. திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை 4.15 மணியளவில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.. இவரது மரணம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவிஞர் பிறைசுடன் தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களை எழுதியுள்ளார்.. 1985 ஆம் ஆண்டு வெளியான ‘சிறை’ திரைப்படத்தில் ராசாத்தி ரோசா பூவே என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் பிறைசூடன்.. சோலப் பசுங்கிளியே, மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.. எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது..