பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார்..
பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசி மிரட்டிய விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் சூர்யா. கட்சிப் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திருச்சி சூர்யா பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். பாஜக மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என்றும் சூர்யா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி அண்ணாமலை என்று பதிவிட்டுள்ளார்..
https://twitter.com/TrichySuriyaBJP/status/1600033917595054080