அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதற்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் டிஆர்பி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,068 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.மேலும் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
Categories