தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செதுக்கிக் கொண்டதற்கான சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைக்கும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் போக்குவரத்து சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானம் மூலம் செல்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்பதை உறுதி படுத்தும் விதமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைக்கும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளிநாடு செல்வோர் selfregistration.cowin.gov.in என்ற தளத்தில் சென்று செல்போன், ஓடிபி எண் அளித்த பிறகு வலது பக்கத்தில் காணப்படும் raise an issue – வை கிளிக் செய்ய வேண்டும். பிறகு add passport details -ல் தங்களது பாஸ்போர்ட் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.