பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியில் நேற்று 12 : 40 மணி அளவில் மேகம் சூழ்ந்து மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 பேர் மரணமடைந்தனர்.. இது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் அவரது உடல் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார் .