டெல்லி பாலம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள ராணுவ அதிகாரியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத்தொடந்து சூலூரில் இருந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் விமானப்படைக்கு சொந்தமான c-130j சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல்கள் டெல்லி பாலம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 13 ராணுவ வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி தற்போது அஞ்சலி செலுத்தி வருகிறார்.