முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் இறுதி ஊர்வலம் டெல்லி பாலம் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு காமராஜ் மார்க் வழியாக கண்டோன்மெண்ட் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்றனர்.
தற்போது அவரது உடல் கண்டோன்மெண்ட் மயானத்தில் வைக்கப்பட்டு ராணுவ மரியாதை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மனைவி மதுலிகாவின் உடலுக்கு ராணுவ மற்றும் அண்டை நாடுகளின் தூதரக உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.