நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 1-12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விடுப்பு நாட்களை ஈடுசெய்வதற்காக வாரத்தில் 6 நாட்களும் முழுமையாக பள்ளிகள் நடைபெறும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்
Categories