3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் அதனை வரவேற்பதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக பல முக்கிய பிரச்சனைகளை குறித்து பேசினார். அதிலும் குறிப்பாக மூன்று வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்றும் தெரிவித்தா.ர் இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ள.து மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை நாங்கள் சமர்ப்பிக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.