மைசூருக்கு சென்று கொண்டிருந்தபோது பிரதமர் சகோதரிகளின் கார் விபத்தில் சிக்கியதில் அவர் காயம் அடைந்தார். பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உட்பட 6 பேர் மைசூர் வந்தனர். மைசூரில் இருந்து பந்திப்பூர் வனவியல் பூங்காவுக்கு சென்ற போது கார் விபத்தில் சிக்கியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவர் மீது மோதியதில் பிரகலாத் மோடி அவரது குடும்பத்தினர் காயம் அடைந்தனர். காயமடைந்த பிரகலாத் மோடி உள்ளிட்டோர் சிகிச்சைக்காக மைசூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Categories