டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப், சண்டிகாருக்கு கூடுதல் பொறுப்பாக பன்வாரிலால் நியமிக்கப்பட்ட நிலையில் பிரதமரை சந்தித்து அவர் பேசியுள்ளார்.