ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார்.
இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். விழா தொடங்கிய உடனே தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதை தலைவணங்கி ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு முன்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெயரை குறிப்பிடும் போது ஒன்றிய அமைச்சர் என குறிப்பிட்டும் பல முறை ஒன்றிய என்று குறிப்பிட்டும் பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஸ்டாலின் ஆட்சியில் மத்திய என்ற வார்த்தை ஒன்றிய என்று குறிப்பிட்டுப் பேசி வரும் நிலையில் பிரதமர் மோடி முன்பாக ஒன்றிய என பேசியது பெரிதாகக் கருதப்படுகிறது.