மூத்த காங்கிரஸ் தலைவர் மாதவசிங் சோலங்கி இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மாதவசிங் சோலங்கி காலமானார். அவருக்கு வயது 93. இவர் நான்கு முறை குஜராத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.