பிரபல மலையாள திரைப்பட இளம் இயக்குனர் மாரடைப்பால் இன்று திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள திரைப்பட இளம் இயக்குனர் நரணிப்புளா ஷாநவாஸ் இன்று அகால மரணம் அடைந்தார். அது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாரடைப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் 2015ஆம் ஆண்டு கறி என்ற படம் மூலமாக அறிமுகமானார்.
அதன்பிறகு ஜூலையில் வெளியான இவரின் ‘சூப்பியும் சுஜாதாவும்’என்ற திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவரின் மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி இவரின் இழப்பு திரையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.