Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல இளம் தமிழ் நடிகைக்கு கொரோனா….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழில் அட்டகத்தி, எதிர்நீச்சல், நெஞ்சம் மறப்பதில்லை, கபட தாரி,ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நந்திதாவுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை அடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோணா பரிசோதனை செய்ய வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |