முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவானும், கேப்டனுமான ரிக்கி பாண்டிங் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 2 ஆம் தேதி பெர்த் ஸ்டேடியத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் வர்ணனையின் போது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்சு சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் ஆஸ்திரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
பெர்த்தில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளின் போது, சேனல் 7 க்காக பாண்டிங் வர்ணனை செய்து கொண்டிருந்தார். “ரிக்கி பாண்டிங் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், இன்றைய எஞ்சிய கவரேஜுக்கு அவர் வர்ணனைகளை வழங்கமாட்டார்” என்று ஒளிபரப்பு சேனல் 7 இன் செய்தித் தொடர்பாளர் ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ரிக்கி பாண்டிங் குணமடைந்து வர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதய ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இரண்டு வருடங்கள் கடினமானது. இந்த ஆண்டு, ஆஸ்திரேலியா இரண்டு பெரிய ஜாம்பவான்களான ராட் மார்ஷ் மற்றும் ஷேன் வார்னை மார்ச் மாதத்தில் ஆட்டம் இழந்தது. மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் செப்டம்பர் 2020 இல் திடீரென மாரடைப்பால் காலமானார். மேலும், மேற்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பரும், சமீபத்தில் நெதர்லாந்து பயிற்சியாளருமான ரியான் கேம்ப்பெல் என்பவரும் இந்த ஆண்டு ஏப்ரலில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், இதன் காரணமாக அவர் இறந்துவிட்டார்.
47 வயதான பாண்டிங் 168 டெஸ்டில் ஆஸி அணிக்காக விளையாடி 51.85 சராசரியில் 13.378 ரன்களை 41 சதங்கள் மற்றும் 62 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். 375 ஒருநாள் போட்டிகளில், 30 சதங்கள் மற்றும் 82 அரைசதங்களுடன் 42.03 சராசரியில் 13,704 ரன்கள் எடுத்தார். 17 டி20 போட்டிகளில், 28.64 சராசரியில் 401 ரன்கள் எடுத்தார் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்தார்..
அவர் 1999, 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் மூன்று 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இருந்தார், அதில் இரண்டு போட்டிகளில் கேப்டனாக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.