திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் பீட்ஸா, நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .அதில் விஜய் சேதுபதியை பாராட்டிய வாழ்த்து தெரிவித்த போது ஏற்க மறுத்து தவறாக பேசியதாக அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு கொடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.