பிக்பாஸ் பிரபல நடிகை ஜெயஸ்ரீ ராமையா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஜெயஸ்ரீ ராமையா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக வேலை இல்லாமல் இருந்த ஜெயஸ்ரீ, மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் இன்று காலை ஜெயஸ்ரீ தன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சில படங்களில் நடித்துள்ள இவர், கன்னட பிக்பாஸ் 3 வது சீசனில் பங்கேற்றவர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.