கர்த்தார் உலக கோப்பை தான் என்னுடைய கடைசி உலக கோப்பை என அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களுடன் நேர்காணலில் பேசிய அவர், நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலக கோப்பை. இந்த முடிவை எடுத்து விட்டேன். உண்மை என்னவென்றால் ஒரு சிறிய பதற்றம் உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக செல்ல நான் ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Categories