நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்கு உரியவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். ஓய்வு பற்றி பெடரர் கூறும்போது, “தற்போது எனக்கு 41 வயதாகிறது. 24 ஆண்டுகளில் 1,500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் கனவு கண்டதை விட டென்னிஸ் என்னை பெருமையாக நடத்தியது. தற்போது ஓய்வுக்கான நேரத்தை நான் அடையாளம் காண வேண்டியுள்ளது” என்றார்.
Categories