இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்டிடிவி (NDTV)-யை அதானி குடும்பம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக அதானி குடும்பத்தின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் மூலம் என்டிடிவியின் 29.18 சதவீதம் பங்குகளை மறைமுகமாக வாங்கியுள்ளது. ஏற்கனவே பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான குவிண்ட்-ன் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஊடகத்துறையிலும் ரிலையன்ஸ் குடும்பத்துடன் அதானி போட்டியில் இறங்கியுள்ளது.
Categories