விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையில் இதுவரையிலும் இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories