Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய கட்சி – ரஜினி அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடங்குவது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நான் என்னுடைய அரசியல் குறித்த முடிவை கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஜனவரியில் கட்சி தொடங்குவது தொடர்பாக டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரஜினி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்…. அதிசயம்… நிகழும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |