Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய கல்விக் கொள்கை….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. கடந்த ஒரு வருடங்களில் திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாலையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்கிய குழு புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை தமிழக அரசுக்கு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |