தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று நிர்மல்குமார் திடீரென்று பரபரப்பை கிளப்பியுள்ளார். என் ஆர் காங்கிரஸ் 10, பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ரெங்கசாமி முதல்வர் வேட்பாளர் என்று கூறப்பட்ட நிலையில், முதல்வர் யார் என்பது குறித்து கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறியதால், ஆட்சி அமைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.