இன்று புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 43 பேர் இன்று மாலை மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியிடப்பட்டது. புதிதாக பதவியேற்க உள்ள 43 மத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் பெயர் இடம் பெற்றுள்ளது. நாராயணன் தாட்டு ரானே, சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு , கிஷன் ரெட்டி, பசுபதி குமார் பராஸ், அனுப்பிரியா சிங் படேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
Categories