தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி 2000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி 2000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி 2000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு மே மாதமே முதல் தவணையாக 2000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பழைய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.