புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றத்தை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று 11வது நாளாக விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. ஒரு ஆண்டு ஆனாலும் எங்கள் போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
மேலும் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் இந்தப் போராட்டம் கட்டாயம் தொடரும் என்று விவசாயிகள் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்தை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.