பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.
இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ளது புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து இந்தியா 40க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் 5 பேர், தஞ்சையில் மூன்று பேர், நீலகிரி 2, தேனி, மதுரை மற்றும் செங்கல்பட்டில் தலா ஒருவருக்கு கொரோனா இருப்பதாக கூறியுள்ளார். பிரிட்டனில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறியுள்ளார். அது மட்டுமன்றி தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.