புதிய AY 4.2 வகை கோவிட் தொற்று தமிழகத்தில் இதுவரை இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஏஓய் 4.2 என்ற அந்த உருமாற்ற வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் அது சிலரை தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே AY வகை உருமாற்ற வைரஸ் வேகமாக பரவக்கூடிய தன்மை பெற்றுள்ளதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறைவு என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானி சமீரன் பாண்டா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.