குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 490 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி ரேஷன் கடைகளில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ 490 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு தரப்படும்.. வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்படும்.. ஜனவரி 12-இல் இளைஞர் தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி புதுச்சேரி வரவில்லை.. 12ஆம் தேதி நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொள்கிறார் என்று தெரிவித்தார்..