Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்!!

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 என 3 கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்..  முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 21 இல் தேர்தல் நடைபெறும். இரண்டாவது கட்டமாக புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மூன்றாவது கட்டமாக புதுச்சேரியில் உள்ள மற்ற அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 28 இல் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 31ஆம் தேதி எண்ணப்படும் என்றும்,  முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

Categories

Tech |