தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து. புதுச்சேரியில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் நாராயணசாமி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையே மோதல் நிலவி வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.