புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அமைச்சர் நமச்சிவாயம்.. கனமழை காரணமாக புதுச்சேரி காரைக்காலில் நாளை முதல் மேலும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. மேலும் தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது… இந்நிலையில் மழை புதுச்சேரிக்கு பள்ளி, கல்லூரிக்கு மேலும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.