Categories
மாநில செய்திகள்

BREAKING : புத்தாண்டு கொண்டாட்டம்…. கடற்கரைகளில் அனுமதியில்லை…!!!!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சமுதாய, கலாசார அரசியல், கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகின்றது.  கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் புத்தாண்டு தினத்தன்று கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |