புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ஆம் தேதி அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு கீழ்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக வருடம் தோறும் முக்கியமான அறிவிப்புகளை ஒவ்வொரு புத்தாண்டுகளிலும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று வெளிநாடுகளில் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் இருக்குமா? இருக்காதா என்று மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் தற்போது டிஜிபி காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
#31.12.2022 அன்று பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.
#31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90 ஆயிரம் காவல் துறையினர், பத்தாயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகன சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே நள்ளிரவு மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
#நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதுகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.
முதல் நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது.
#மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது மீறினால் கைது செய்யப்படுவர் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
#அதி வேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் விபத்துகளை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள்.
#மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி பின்னர் பயணத்தினை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள் அதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
#வழிபாட்டு தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.
#வெளியூர்களுக்கு செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும்.
#கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
#கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தரும் பொது மக்களின் ரகசியம் காக்கப்படும்.
#அவசர உதவி தேவைப்படுபவர்கள் காவல் உதவி என்று அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கு காவல் உதவி செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.
அசம்பாவிதம் இல்லாத விபத்து இல்லா புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறையின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!