புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.