Categories
மாநில செய்திகள்

BREAKING : பெட்ரோல் குண்டுகள் வீச்சு…. 19 பேர் கைது…. டிஜிபி எச்சரிக்கை..!!

ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசிய மர்ம  நபர்களில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோவை, ஈரோடு, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறிப்பாக கோவையில் பாஜக நபர்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் அவர்களுடைய அலுவலகங்கள், இந்து முன்னணியின் இடங்கள் ஆர்.எஸ்.எஸ் இடங்களில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடந்து வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு தான் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் தலைமை இயக்குனர் தாமரை கண்ணன் தலைமையில் கோயம்புத்தூரில் சிறப்பு அதிரடிப்படை, கமாண்டோ என 3500 போலீசார் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே நேற்று காணொலி மூலம் கோவை ஐ.ஜி.சுதாகர், ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய இறையன்பு, பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உத்தரவிட்டிருந்தார்.. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாருமே இதுவரை கைது செய்யப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது வரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், தமிழகத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்..

 

Categories

Tech |