Categories
மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படும் என பாமக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும்,தனியார் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் பொதுத் துறை வங்கிகளில் பெற்ற கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேலும் 2021-2022 ஆம் ஆண்டு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி தங்கம், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்து விலையை கட்டுக்குள் வைக்கப்படும் என்று பாமக அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும் என அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |