பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது: எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியவில்லை. மக்களின் நிலைமை ஏற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மத்திய, மாநில அரசு விரைவில் இது சம்பந்தமாக விவாதித்து ஒரு வழியை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
1.44 லட்சம் கோடிக்கு பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தந்திரத்தால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் தான் பெட்ரோல், டீசல் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், எண்ணெய் பத்திரங்களுக்கு மட்டும் வட்டியாக ரூபாய் 62,000 கோடி அரசு செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.