மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.98.40க்கும், டீசல் லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து ரூ.92.58க்கும் விற்பனையான நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.98.65க்கும், டீசல் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து 92.83க்கும் விறபனையான நிலையில் இன்றும் அதே விலைக்கு விற்பனையாகிறது.
இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை ஜூன் மாதத்தில் மட்டும் 12 முறை அதிகரித்துள்ளது. இந்நிலையில நிதிநிலைமை சரியான பின்னரே பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்றும், நிதி சூழலில் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்றும் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.