Categories
தேசிய செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் அமல்….. வாகன ஓட்டிகளுக்கு செம மகிழ்ச்சி அறிவிப்பு…. !!!!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் குறைக்கப்படுவதாக டெல்லி மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும் மத்திய அரசு கடந்த நவம்பர் 4ஆம் தேதி குறைத்தது.

அதன் தொடர்ச்சியாக 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்தன. இந்நிலையில் டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்தியில், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 30 சதவீதத்தில் இருந்து 19.40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதன் மூலம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 8 ரூபாய் குறையும். இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது .இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |